தீர்த்தமலையில் சூழல் மேம்பாட்டு குழு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஜூன், 2024

தீர்த்தமலையில் சூழல் மேம்பாட்டு குழு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தீர்த்தமலையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் IFS, உதவி வன அலுவலர் சரவணன் அறிவுரையின் படி தீர்த்தமலை வனச்சரகத்தின் சார்பாக பெரியண்ணன் வனச்சரக அலுவலர் தலைமையில் வனவர் வடிவேல் வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், ஜீவா, சுரேஷ், மதன் குமார், குப்புசாமி, நாசி, ஜெயலட்சுமி, கல்பனா, வனக்காவலர் சிற்றரசன், மல்லிகா, தோட்டகாவலர்கள் கலந்துகொண்டனர்.

 

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு ஆண்டியூர் கிராம சூழல் மேம்பாட்டு குழு சார்பில் 50 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மன் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு பணி செய்தும்,தீர்த்மலை சூழல் மேம்பாட்டு குழு சார்பில் விளிப்புணர்வு  பாதாகைகள் ஏந்தி50 கற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அலுவலக வளாகத்தில் இருந்து முக்கிய தெருக்கள் வழியாக பேரணி நடத்தியும்,இருசக்கர வாகனத்தில் பதாகைகளுடன் ஊர்வலம் சென்றும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் , அனைவரும் ஒன்று சேர்ந்து உறுதி மொழி எடுத்தும் உலக சுற்று சூழல் தின விழா கொண்டாடப்பட்டது

கருத்துகள் இல்லை:

Post Top Ad