பென்னாகரம் அருகே சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 ஜூன், 2024

பென்னாகரம் அருகே சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த  பழையூரில்  சிலம்பம் தர்மபுரி மாவட்டம் சங்கம் மற்றும் சிலம்பம் தமிழ்நாடு சங்கம் இணைந்து சர்வதேச புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்த பேரணியில் மேச்சேரி பென்னாகரம் தேசிய நெடுஞ்சாலையிலும் மற்றும் பழையூரிலிருந்து ஏரியூர் செல்லும் சாலையிலும் பதாதைகளை ஏந்தியபடி பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சுற்றி மாணவர்கள் வீதி வீதியாக  ஒழிப்போம் ஒழிப்போம் புகையிலை ஒழிப்போம், ஒழிப்போம் ஒழிப்போம் பீடி சிகரட்டை ஒழிப்போம்,  மதுவை ஒழிப்போம் என கோசங்கள் இட்டு புகை இலையால் வரும் நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இதில் பாரம்பரிய விளையாட்டு சிலம்பம் பற்றி மாணவர்கள் உடல் நலம் ஆரோக்கியம் குறித்தும் பெண்கள் தற்காப்பு பற்றி எடுத்துரைக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிலம்பம் தமிழ்நாடு சங்க மாநில செய்தி தொடர்பாளர் மாஸ்டர் பாரதிராஜா, சிலம்பம் தர்மபுரி மாவட்ட செயலாளர் கனகராஜ், சிலம்பம் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், பெரும்பாலை போலீசார் மற்றும் எஸ் ஐ.  உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட சிலம்பம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்..

கருத்துகள் இல்லை:

Post Top Ad