ஆனால் பட்டா வழங்கிய இடத்தை இதுவரை அளவீடு செய்து வழங்காததால், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலக்கோடு தாசில்தாரிடம், குடி இருக்க இடமில்லை, வீட்டுவாடகை கட்ட முடியவில்லை, எனவே பட்டா இடத்தை அளந்து வழங்குமாறு முறையிட்டனர். அதனை தொடர்ந்து சர்வேயர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட தாசில்தார் ஆறுமுகம், இலவச வீட்டுமனைபட்டா வழங்கிய இடத்தை உடனடியாக அளந்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்,
அதனைதொடர்ந்து முதற்கட்டமாக சர்வே எண் 329, 330 ஆகிய 2 சர்வே எண்களில் வழங்கப்பட்ட 187 பட்டாக்களுக்கு தாசில்தார் ஆறுமுகம், வி.ஏ.ஓ.குமரன் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர் முன்னிலையில் நிலத்தை அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டு ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்ட இடத்தினை அளவீடு செய்து வழங்கி வருகின்றனர்.
நாளைக்குள் 187 பயனாளிகளுக்கும் நிலம் அளவீடு செய்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கோரிக்கையை ஏற்று உடனடி நிலத்தை அளவீடு செய்து வழங்கிய வருவாய் துறையினருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக