மாரண்டஅள்ளி பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 ஜூன், 2024

மாரண்டஅள்ளி பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.


மாரண்டஅள்ளி பேரூராட்சி மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. 


இந்த மாதாந்திர கூட்டமானது மூன்று மாதங்கள் கழித்து நடைபெறுவதால் மூன்று மாதங்களுக்கான வரவு, செலவு கணக்குகள் மற்றும் மாரண்டஅள்ளி அம்பேத்கர் காலனி, ஜி.எம்.ஆர் லே-அவுட்டில் உள்ள மேல்நிலை நீர் தேக்க  தொட்டிக்கு புதிய பைப் லைன் அமைப்பது, மல்லாபுரம் சாலை மற்றும் ஆறுமுக உடையார் தெருவில் புதிய வடிக்கால அமைப்பது டி.வி.எஸ் ஷோரூம் அருகே புதிய சிமெண்ட் சாலை அமைப்பது, பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் உயிரி அகழ்வாய்வு பணி செய்தல் உள்ளிட்ட சுமார் 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணிகள் மேற்கொள்ள இக்கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


மேலும் இக்கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, துணைத் தலைவர் கார்த்திகா, மன்ற உறுப்பினர்கள் கீதா, லட்சுமி, யதிந்தர், கோவிந்தன், கார்த்திகேயன், ரீனா, புவேனேஸ்வரி, விஸ்வநாதன், அபிராமி, சிவக்குமார், வெங்கடேசன், அனிதா, சுகந்தி, இளநிலை உதவியாளர்கள், தூய்மை மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad