இது குறித்து பலமுறை பொதுமக்களும் மற்றும் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தி வந்தது. தற்போது தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி மக்கள் நிற்க கூட இடமில்லாமல் வெட்ட வெளியில், மழை, வெயிலில் கார்த்திருக்க வேண்டிய நிலையில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் குடிநீர் வசதி, போதுமான கழிவறை வசதி போன்றவை எல்லாம் அறவே இல்லை.
இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பெரும் நகரங்களுக்கு சென்று வருகின்ற மக்கள், தினமும் அலுவலகத்துக்கு செல்லுபவர்கள் சிறு வணிகர்கள் என பெரும்பான்மையான மக்கள் பாதிக்கிற நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையை கண்டு மாவட்ட நிர்வாகம் தீர்த்துக் கொடுக்காமல் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் அமைதி காத்து நிற்கிறது.
எனவே இந்த பேருந்து நிலையத்தை அடிப்படையில் பணிகளை முடித்து உடனடியாக திறக்க வேண்டும், மேலும் இனிமையும் பேருந்து நிலையம் திறக்க காலதாமதம் செய்தால் பெண்ணாகரத்தில் இருக்கும் அனைத்து வணிகர்களும் அழைத்து கடை அடைப்பு மற்றும் உண்ணாவிரதம் நடத்துவோம் என்று வணிகர் சங்கத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக