தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலிகொல்லப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி குமரன் (வயது .33) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இவர் நேற்று காலை 11 மணிக்கு பேகார அள்ளியில் உள்ள கோயில் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் தர்மபுரியிலிருந்து பாலக்கோடு நோக்கி புதிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
புலிக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் இவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த மதிகோன் பாளையம் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக