தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், தருமபுரி பிரிவு மாவட்ட விளையாட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.39.35 இலட்சம் மதிப்பிலான அலுவலக புனரமைப்பு பணிகள் மற்றும் உள் விளையாட்டரங்க மேற்கூரை பழுதுபார்க்கும் பணிகள், வண்ணம் பூசும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப அவர்கள் இன்று (09.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்ட மகளிர் விளையாட்டு வீராங்கனைகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதி வீராங்கனைகள் கபாடி, வாலிபால், டேக்வாண்டோ, இறகுபந்து விளையாட்டில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மகளிர் விளையாட்டு விடுதியினை பார்வையிட்டு, பயிற்சி மேற்கொள்ளும் விராங்கனைகளிடம் வழங்கப்படும் உணவு விவரம் (Menu) தரம் குறித்து கேட்டறிந்து, கலந்துரையாடினார்.
மேலும் விளையாட்டு விடுதியில் பயிலும் வீராங்கனைகளை சர்வதேச, தேசிய, மாநில போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமான பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இந்நிகழ்வுகளின்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.தே.சாந்தி மற்றும் தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக