நேரு யுவகேந்திரா தர்மபுரி மற்றும் கக்கன் இளைஞர் நற்பணி மன்றம் ஜெயம் யோகா அறக்கட்டளை சார்பில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 ஜூன், 2024

நேரு யுவகேந்திரா தர்மபுரி மற்றும் கக்கன் இளைஞர் நற்பணி மன்றம் ஜெயம் யோகா அறக்கட்டளை சார்பில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு.


நேரு யுவகேந்திரா தர்மபுரி மற்றும் கக்கன் இளைஞர் நற்பணி சங்கம் தர்மபுரி ஜெயம் யோகா தர்மபுரி இணைந்து நடத்திய பத்தாவது சர்வதேச யோகா தினம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் முனைவர் சரவணன் தலைமை உரையாற்றினார்முன்னதாக நேரு யுவகேந்திரா சார்பில் முனியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார்.


ஜெயம் யோகா சார்பில் முனைவர் யோக பிரியா மற்றும் சண்முகம் இருவரும்  மாணவர்களுக்கு யோகாசனம் பயிற்சி அளித்தார்கள் இந்நிகழ்வில் கக்கன் இளைஞர் நற்பணி சங்கம் சார்பாக பாவல்ராஜ்,பரமசிவம், நாகராஜ், விஜயன், ரங்கநாதன், கமலக்கண்ணன், முருகன், கபில் தேவ் ஆகியோர் மன்றம் சார்பாக கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவர்கள் 150 நபர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்து அவர்களுக்கு நேரு யுவகேந்திரா தருமபுரி சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad