வெள்ளக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆண் மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஜூன், 2024

வெள்ளக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆண் மான், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு.


பரிகம் காப்புக்காட்டில் இருந்து தொப்பூர் காப்பு காட்டிற்கு செல்லும் வகையில், சுமார் 3 வயதுடைய ஆண் மான் ஒன்று, தர்மபுரி மாவட்டம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள சேலம்-பெங்களூர்  தேசிய நெடுஞ்சாலையை இன்று கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மான் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்டதில், சென்டர் மீடியனில் மான் படுகாயம் ஏற்பட்டு விபத்தில் சிக்கி மயங்கி கிடந்தது. 

இதுபற்றி தகவல் அறிந்த சுங்க சாவடி ரோந்து படையினர் மற்றும் வனத்துறையினர் ஒன்றிணைந்து, விபத்து படுகாயம் அடைந்த மானை மீட்டு சிகிச்சைக்காக பாளையம்புதூர் கால்நடை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் மீண்டும் வனப்பகுதியில் மானை விடுவதற்காக, கொண்டு சென்றனர். அப்போது திடீரென செல்லும் வழியிலேயே மான் உயிரிழந்துவிட்டது. பின்னர் மீண்டும் உயிரிழந்த மானை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக பாளையம்புதூர் கால்நடை மருத்துவமனைக்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர், தொப்பூர் காப்பு காட்டில் வனத்துறையினர் அடக்கம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad