அரூர் அருகே அன்னை அஞ்சுகம் நகரில் விசிக கொடியேற்று விழா; கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஜூன், 2024

அரூர் அருகே அன்னை அஞ்சுகம் நகரில் விசிக கொடியேற்று விழா; கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா பங்கேற்பு.


தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அன்னை அஞ்சுகம் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பாலையா தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா  கலந்துகொண்டு புதியதாக பெயர் பலகை திறந்து வைத்து கொடியேற்றி அங்குள்ள பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்  சிதம்பரம் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம்  பெறும் வகையில் அவ்வூரை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு மேள தாளம் முழங்க வாண வேடிக்கையோடு  ஊர்வலம் கொண்டு சென்று பாப்பிசெட்டிப்பட்டியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு  மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் விசிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கடத்தூர் ஒன்றிய பொருளாளர் செ.ராஜசேகர் அரூர் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி குமார்வளவன் ஈழப்பறைமுருகன் மற்றும்  அன்னை அஞ்சுகம் நகர் பாப்பிசெட்டிப்பட்டி  விசிக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad