சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47AAன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010 விதிகளில் விதி 4(2)ன்படி மைய மதிப்பிட்டு குழு 26.04.2024ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க தருமபுரி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விவரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மீது ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின் அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம் கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்திட பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மதிப்பிட்டு துணைக்குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தருமபுரி மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக