இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கோ.கண்ணன் அவர்கள் தலைமை ஏற்றார், மதிப்புமிகு தர்மபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் P.சிந்தியா செல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்து விளக்கை ஏற்றி வைத்து, மாணாக்கர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு பாலமுருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர் D. ஜெயப்பிரியா நிறுவன ஜெயம் யோகா டிரஸ்ட் தர்மபுரி அவர்கள் யோகா கருத்தாளராக கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு சூரிய நமஸ்காரம், யோகாசனங்கள், எளிய முறை உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, முத்திரைகள், தியான முறைகள்உள்ளிட்ட பயிற்சிகளை செயல்முறை விளக்கத்துடன் வழங்கினார்.
தர்மபுரி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் ஆர். சந்திரசேகரன், முனைவர் பி குப்புசாமி முனைவர் எம். ராஜாராம், திருமதி பி கயல்விழி அவர்களும், தேசிய மாணவர் படை அலுவலர்கள் ஜெயம் பொறியியல் கல்லூரி மேஜர் பி முருகன், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளி எம் சக்கரவர்த்தி, கம்பைநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி கே பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
300 மேற்பட்ட மாணாக்கர்களுடன் பேராசிரியர்களுடன், கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் சிந்தியா செல்வி, கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் அவர்களும் யோக பயிற்சியினை செய்தது சிறப்பாக இருந்தது. தர்மபுரி அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் A.தீர்த்தகிரி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தேசிய மாணவர் படை அலுவலர், நாட்டு நலப்பணி திட்ட உதவி திட்ட அலுவலர்கள், உடற்கல்விஇயக்குனர் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக