தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு காவல் நிலையத்தில் பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துனைத் தலைவர் பி.கே.சிவா தலைமையில் மீனவர் அணி மாவட்ட துணைத் தலைவர் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பிணர்கள் கிருஷ்ணன், ஸ்ரீதேவி, நகர செயலாளர் சிவா, முன்னாள் நகர துணைத் தலைவர்கள் உண்ணிகிருஷ்ணன், ராமர் ஆகியோர் அளித்த புகாரில், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கடந்த 5ம் தேதி கோயமுத்தூரில் ஆட்டின் கழுத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ படத்தை மாட்டி ஆட்டினை வெட்டி அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.
இதன் மூலம் அண்ணாமலையை கொல்ல வேண்டும் என்ற கொடூர புத்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.இத்தகைய செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக