பாலக்கோடு மார்கெட்டில் தக்காளி விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி இல்லத்தரசிகள் கவலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 ஜூன், 2024

பாலக்கோடு மார்கெட்டில் தக்காளி விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி இல்லத்தரசிகள் கவலை.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி,  உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பலான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். தாங்கள் விளைவித்த தக்காளியை பெரும்பாலும் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.


பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் பருவகாலங்களில் தினந்தோறும்  சராசரியாக 500 டன் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளூர் தேவைபோக, வியாபாரிகள் மூலம் தென் மாவட்டத்திற்க்கும், சென்னை மற்றும் கேரள கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த சில  மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 7ரூபாய் முதல் 10ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தொடர் மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் தக்காளி விளைச்சல் பாதிப்படைந்து, படி படிப்பயாக தக்காளி வரத்து குறைந்து தற்போது தக்காளி மார்க்கெட்டிற்க்கு 100 டன் அளவிற்க்கும் குறைவாகவே தக்காளி வரத்து உள்ளதால், தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து இன்றைய மாலை 5 மணி நிலவரப்படி 16 கிலோ  எடை கொண்ட ஒரு கூடை தக்காளி 850 ரூபாய்க்கும் 26 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி 1500 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.


தக்காளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கும், உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 60 முதல் 66 ரூபாய்க்கும், வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் வரையும் விற்பனையாகி வருகிறது. மேலும் தொடர்ந்து சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகை நாட்கள் வருவதால் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியபாரிகள் தெரிவிக்கின்றனர். தக்காளி விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad