தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி கூட்டரங்கில் கலைஞர் கனவு திட்டம் குறித்து பயனாளிகள் தேர்வு குழு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நாகராஜன் தலைமையில் நடந்தது.
இம்முகாமிற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகஅரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், 2024-25 நிதிஆண்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட 3 ஆயிரத்து100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. அதன்படி ஒரு வீட்டுக்கு 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீடீட்டில் 360 சதுரஅடி அளவில், சமையலறையுடன் கட்டப்பட வேண்டும்.
இதில் 300 சதுரஅடி கான்கிரீட் கூரையுடனும், எஞ்சிய 60 சதுர அடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாக, பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்க்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இம்முகாமில் ஊராட்சிமன்ற தலைவர்கள், வட்டார பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பயனாளிகள் தேர்வு குழு உறுப்பிணர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக