தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தில் வசித்து வரும் விவசாயி சந்தன் மனைவி முத்தம்மாள் (வயது.69) இவர் கடமடை இரயில்வே தண்டவாளம் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்தார்.
இன்று மாலை 5.30 மணிக்கு காரைக்காலிருந்து பெங்களுர் செல்லும் பயணிகள் இரயில் கடமடை அருகே வந்து கொண்டிருந்தது, அப்போது இரயிலின் தண்டவாளத்தில் பசுமாட்டின் கால் மாட்டிக் கொண்டது, இதையறிந்த முத்தம்மாள் தண்டவாளம் அருகே சென்று பசு மாட்டினை காப்பற்ற போரடினார். அதற்குள் இரயில் மோதியதில் முத்தம்மாள் மற்றும் பசுமாடு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த தர்மபுரி இரயிவே போலீசார் முத்தம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பசுமாடு இறந்தது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக