இந்நிகழ்ச்சிக்கு புதிய நிர்வாக செயலாளர்கள் கிரிதர், சக்திவேல், பொருளாளர் முத்து, முதல் உதவி தலைவர் கோவிந்தசாமி, 2 ம் உதவி தலைவர் ராமநாதன் முன்னாள் தலைவர் ராஜாமணி, முன்னாள் பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்ரீ மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தலைவர் அரிமா கோவிந்தராஜீ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 85 பேருக்கு புடவையும், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கப்பட்டது. அரிமா தருமன் அவர்கள் அவருடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்க தொகையாக 3 இலட்சம் ரூபாய் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக