காரிமங்கலம் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஜூன், 2024

காரிமங்கலம் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (07.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 (2023-24) திட்டத்தின்கீழ் ரூ.77.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் நாகலேரி மேம்பாட்டுப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேம்பாட்டு பணியினை குறிபிட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.


காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடிலம் ஊராட்சி அ.சப்பாணிப்பட்டியில் பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே 2021 -2022 ஆம் ஆண்டு நபார்டு - XXVII - திட்டத்தின் கீழ் ரூ.206.00/-இலட்சம் மதிப்பீட்டில்  கட்டப்படும் உயர்மட்டபாலம் அமைக்கும் பணிகளையும், கோவிலூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டம் 2023 - 2024 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.20.50/- இலட்சம் மதிப்பீட்டில் ஜம்பேரி ஏரியிலிருந்து சென்றாயனஅள்ளி ஏரி வரை பைப்லைன் அமைக்கும் பணிகளையும், பூமாண்டஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.24.50/-இலட்சம் மதிப்பீட்டில்  புதிய குளம் அமைக்கும் பணிகளையும், காளப்பனஅள்ளி, பூமாண்டஅள்ளி ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  கணக்கெடுக்கும் பணிகள் என மொத்தம் ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர், உதவிப்பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பணிமேற்பார்வையாளர்களுக்கு கணக்கெடுப்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.


இந்த ஆய்வுகளின்போது, காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ரவி, பொறியாளர் திரு.முருகன், காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி. ஆயிஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad