"பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 ஜூன், 2024

"பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் சமூகநலத்துறை, மாவட்ட சமூகநலன் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் “ பெண் குழந்தைகளை காப்போம்,  பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்”  குறித்த  மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்  கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.06.2024) நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:


இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில்  2023 – 24 ஆம் நிதியாண்டிற்கான “ பெண் குழந்தைகளை காப்போம்,  பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற  திட்டத்தினை இம்மாவட்டத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயலாற்ற வேண்டுமெனவும், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்த மக்களிடையே  துறை வாரியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மேலும், தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கல்வித்துறை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை, காவல் துறைக்கு என நிதி ஒதுக்கீடு துறை ரீதியாக பிரித்து வழங்கப்படும் என்றும் அதற்கான செயல் திட்ட அறிக்கையினை செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. 


தருமபுரி    மாவட்டத்தின் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதே இதன் மிக முக்கிய நோக்கமாகவும், மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தினர், ஏழை மக்களிடையே  பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 


இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.கௌரவ்குமார், இ.ஆ.ப.,  வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி. இரா.காயத்ரி, திரு.வில்சன் ராஜசேகர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.சாந்தி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜெயந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதி சந்திரா, மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.பவித்ரா,  மாவட்ட திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திரு.பத்ஹீ முகம்மது நசீர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.மோகன், மாவட்ட  பழங்குடியினர் நல அலுவலர் திரு.கண்ணன்,   மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad