தருமபுரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா,மற்றும் சேலம் உணவு பகுப்பாய்வு நடமாடும் வாகனம் (பொறுப்பாளர்) முதுநிலை பொது பகுப்பாய்வாளர் நரசிம்மன் அவர்கள் இருவரின் வழிகாட்டுதல் மற்றும் ஏற்பாடுகளின் படி தருமபுரி மாவட்டம் முழுவதும் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் உணவு பாதுகாப்பு துறை செயல்பாடுகள், ஆய்வக வாகனத்தின் அம்சங்கள் , உணவுப் பொருள்களில் கலப்படம் நிகழ்விடத்திலேயே கண்டறிதல், கலப்படம் இருப்பின் உரிய உடன் நடவடிக்கை மற்றும் உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடத்தூர் பேருந்து நிலையத்தில் வணிகர் சங்க பிரதிநிதிகள் கண்ணப்பன், பன்னீர்செல்வம், ஜெகதீசன், குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் சேலம் ஆய்வக இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திகேயன், பகுப்பாய்வு வாகன ஓட்டுனர் ரகுநாதன் உள்ளிட்ட குழுவினர் உணவு பாதுகாப்பு நடமாடும் வாகனம் மூலம் உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல் மற்றும் உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து வாகனத்தில் உள்ள எல்.இ.டி. தொடுதிரை வாயிலாக காணொளி காட்சிகள் திரையிட்டு உணவு பொருட்கள் கலப்படம் கண்டறிதல் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
மேலும் தேயிலை, தேன், பால், நெய், சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி, உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொண்டு கொண்டு நேரடியாக கலப்படம் கண்டறிதல் செயல் விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு செய்தனர். மேலும் உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்களளான உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, சைவ, அசைவ குறியீடு, உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், பொருள் எடை, எண்ணிக்கை, நுகர்வோர் தொடர்பு எண் மற்றும் உணவு பாதுகாப்பு உரிம எண் ஆகியவை இருக்க வேண்டியது குறித்து உணவு பொருள் பாக்கெட்டுகளை கொண்டு நேரடியாக செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
நிகழ்வில் பேருந்து நிலைய வளாக கடை விற்பனையாளர்கள், பணியாளர்கள், பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் முத்தானூர் ஊராட்சி தலைவர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக விழிப்புணர்வு கடத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் விஜய்சங்கர், மேற்பார்வையில், பேரூராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் உணவு உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறிதல் மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு, உணவு பொருட்கள் லேபிளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இளநிலை உதவியாளர் ஜெயலட்சுமி, சுகாதார மேற்பார்வையாளர் செந்தில், முரளி, விஜி, உள்ளிட்ட பணியாளர்களும் பங்கேற்றனர். கடத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருபதுக்கும் மேற்பட்ட அளவிலான டீத்தூள், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் சமையல் எண்ணெய், இனிப்பு கார வகைகள் உள்ளிட்ட உணவு மாதிரிகள் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்களால் பல்வேறு இடங்களில் மாதிரி சேகரிக்கப்பட்டு, வாகனத்தில் பகுப்புப்பாய்வுக்கு அளிக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் உரிய நடவடிக்கை நியமன அலுவலர் உத்தரவுப்படி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக