கர்நாடகா மாநிலம் மற்றும் பெங்களுர் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, அப்பகுதிகளில் வரும் மழை நீர் மண் கலந்து கலங்கலாக ஒகேனக்கல் பகுதிக்கு வந்துக்கொண்டிருக்கிறது. எனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் குடிநீர் மற்றும் அப்பகுதியினை சுற்றியுளள் நீர் ஆதாரங்களில் எடுக்கப்பட்டு வரும் குடிநீரினை பொதுமக்கள் நன்கு காய்ச்சி கொதிக்க வைத்து பின் ஆரவைத்து குடிக்க வேண்டும்.
இதன் மூலம் நோய் தொற்றில் இருந்து தங்களை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும், பொது மக்கள் தாங்கள் தினமும் தேவைக்காக பிடித்து வைக்கும் நீரினை மூடி வைக்க வேண்டும். தண்ணீர் பிடிக்கும் பாத்திரங்களை நன்கு கழுவி சுத்தப்படுத்த வேண்டும். சுற்றுப் புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துகொண்டு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும் குடிநீர் கேன்கள் வழங்கும் தனியார் நிறுவனங்கள் குடிநீரின் தரத்தினை உறுதி செய்த பின்னரே விற்பனைக்கு கொண்டு வர வேண்டும், அவ்வாறு ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிககை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. இ.சாந்இ, இ.ஆ.ப, அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக