தருமபுரியில்..தனியார் பர்னிச்சர் கடைக்குள் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து; கோடி கணக்கிலான ரூபாய் மதிப்புள்ள பர்னிச்சர்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 ஜூன், 2024

தருமபுரியில்..தனியார் பர்னிச்சர் கடைக்குள் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து; கோடி கணக்கிலான ரூபாய் மதிப்புள்ள பர்னிச்சர்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசம்.

தருமபுரியில்  கணேசா சினிமா தியேட்டர் இருந்த இடத்தில் தனியார் பர்னிச்சர் கடை ஒன்றி்ற்குள் நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடி கணக்கிலான ரூபாய் மதிப்புள்ள பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது..


பர்னிச்சர் கடைக்குள் பற்றி எரிந்து பரவிய தீயானது, அருகே அருகே உள்ள இரண்டு வங்கிகள், தனியார் ஸ்கேன் சென்டர், வெள்ளி நகை கடை,  ஆகியவைக்குள்ளும் தீ பற்றியது, மூன்று தீயணைப்பு வாகனங்களிலும், நகாராட்சி வாகனங்கள் டிராகட்டர்கள் மூலம்  தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க முயன்றும் பலனிக்கவில்லை நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் சிறியதாக பற்ற தொடங்கிய தீ கட்டுக்கடங்காமல்  எரிந்து வருகிறது சுமார் ஐந்து மணி நேரத்தை கடந்தும் தீயை தற்போது அணைக்க முடியவில்லை


தீப்பற்றி எரிந்து வரும் பர்னிச்சர் கடைக்கு பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகிறது, குடியிருப்பு வாசிகள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர், கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் தீ ஒருபுறம், அதிலிருந்து வெளியேறும் கரும்புகையானது தருமபுரி பேருந்து நிலையம் வரை சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவு தூரத்திற்கு பரவியதால்  மூச்சு திணறல் ஏற்பட்டது, தருமபுரியிலிருந்து சேலத்திற்கும்.. சேலத்திலிருந்து தருமபுரி நகருக்குள் வரும் வாகனங்கள் மாற்று வழியாக திருப்பிவிடப்பட்டது, விடிய விடிய கட்டுங்காமல் தீ மேலும் மேலும் பரவி பற்றி எரிந்து வருகிறது.


தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் போரட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது, நல்வாய்ப்பாக தற்போது வரை எந்தவித உயிர்ச்சேதமா, காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டிருக்கும் இடத்திலிருந்த இரண்டு மின்சார டிரான்ஸ்பர்களில் மின்சார சப்ளை நிறுத்தப்பட்டிருக்கிறது. தர்மபுரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர். ஸ்டீபன் ஏசுபாதம். அவர்கள் சம்பவ இடத்தில் நேரில் வந்து பார்வையிட்டார், இந்த தீ விபத்தை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad