சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாப்பாரப்பட்டி கீழ் பேருந்து நிலையத்திலிருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 ஜூன், 2024

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாப்பாரப்பட்டி கீழ் பேருந்து நிலையத்திலிருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

 

இன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு திணத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி காவல்துறை சார்பில் நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி தலைமையில் கொடியைத்து துவக்கி வைத்தார்.


இந்த பேரணியானது கீழ் பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கோடு செல்லும் முக்கிய சாலை வழியாக  மூன்று ரோடு சந்திப்பு வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை இப்பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் மாணவர்கள் போதை ஒழிப்போம் ஒன்று கூடி வாருங்கள், போதையை ஒழிப்போம் வாழ்வில் ஜெயிப்போம், போதை தன்னிலை மறக்க தானே வலியை தேடும் சம்பவம், புத்தியை கெடுக்கும் போதையை ஒழிப்பீர், நித்தமும் சேரும் நிம்மதி பெறுவீர், போதை அது சாவின் பாதை, போதையில் நீ வீதியில் உன் குடும்பம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி 100க்கும் மேற்பட்ட மாமரத்து பள்ளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இந்தப் பேரணியில் அரசு கலைக் கல்லூரி முனைவர் பாக்கியமணி காவல் உதவி ஆய்வாளர் மாரி மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad