வயது வரம்பு:
14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 உச்ச வரம்பு இல்லை.
கல்வித்தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுள்ள பிரிவு:
- கம்பியாள் (Wireman) (2வருடம்) பற்றவைப்பவர் (Welder) (வருடம்)
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் :
- கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட். (கோபா)
- (1வருடம்),
- கட்டடபட வரைவாளர் (2வருடம்), மின்பணியாளர் (2வருடம்),
- பொருத்துநர் (2வருடம்),
- கம்மியர் மோட்டார் வண்டி (2வருடம்),
- கம்மியர் டீசல் (1வருடம்) மற்றும்
- இயந்திர வேலையாள் (2வருடம்)
ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நவீன தொழிற்நுட்ப புதிய தொழிற்பிறிவுகள் :
- இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்ட்சரிங் டெக்னீசியன் (1 வருடம்),
- மெக்கானிக் எலக்ட்ரிக் வெய்க்கில் (2 வருடம்),
- பேசிக் டிசைனர் & விர்ச்சிவல் வெறிபையர் (2 வருடம்),
- அட்வான்ஸ்டு சி என் சி மெசினிங் டெக்னீசியன் ( 2 வருடம்).
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்கண்ட இணையதள முகவரியில் www.skilltraining.tn.gov.in விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் வேண்டும். இதர சேர்க்கை சம்பந்தமான விவரங்கள் அனைத்தும் www.skilltraining.tn.gov.in மூலம் தெரிந்துகொள்ளலாம்.
பதிவேற்றம் செய்யும்போது தேவைப்படும் ஆவணங்கள்.
- Original 10" Mark Sheet
- Original T.C
- Original Community,
- தார் அட்டை,
- அலைபேசி எண்கள்,
- மார்பளவு புகைப்படம்.-1
- E-Mail ID மற்றும் விண்ணப்பகட்டணம் ரூ.50/- மட்டும் Online மூலம் செலுத்துவதற்காக Debit card/Credit Card /Net Banking/UPI .
பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகையாக வழங்கப்படும் இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா மடிகணினி, விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பண அட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும். ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. மேலும் இந்நிலையத்தில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் இராமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக ரூ.1000/- மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
எனவே தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் விண்ணப்பித்து தருமபுரி மற்றும் அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயணடையுமாறு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்ய தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு - 1) 9445803042, 2) 9361745995 3) 9894930508 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக