மகாத்மா காந்தி மாலைநேர பயிற்சி மையம் மாணவர்களுக்கு PSB டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சார்பில் பாராட்டு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 ஜூன், 2024

மகாத்மா காந்தி மாலைநேர பயிற்சி மையம் மாணவர்களுக்கு PSB டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சார்பில் பாராட்டு விழா.


தருமபுரி மாவட்டத்தில் 13  மலை கிராமங்களில் 500 மாணவர்கள் மகாத்மா காந்தி மாலை நேர பயிற்சி மையம் மூலமாக இலவசமாக பயின்று வருகின்றனர். 2023-2024ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


நிகழ்ச்சியை PSB டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் NDSO-V4U டிரஸ்ட் இணைந்து நடத்தியது, மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து, ஒழுக்கம், ஆரோக்கியம், கல்வி இவை மூன்றும் தான் மாணவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்ற கருத்தை பல திருக்குறளின் விளக்கங்கள் மூலம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய PSB டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இயக்குனர் திரு. சுரேஷ்குமார் விளக்கினார்.


மாணவர்களின் கல்வி அவருடைய எதிர்காலத்தை மேம்படுத்தும், அவர்களுடைய ஒழுக்கம், பெற்றோர்களுக்கு கீழ்படிந்து நடத்தல் சக மாணவர்களுடன் நட்புடன் பழகுதல் குறித்து கருத்துக்களை மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லோகேஷ்வரி Echo technician எளிமையாக விளக்கினார்.


மாணவர்களுக்கு கல்வி  மூலமாகத்தான் இந்த சமூகத்தில் சேவை  மனபான்மை வளர்க்க முடியும் என்ற கருத்தையும் JCI ரவிக்குமார் மாணவர்கள் மனதில் பதியவைத்தார், நந்து ஸ்போர்ட்ஸ் அகாடமி திரு. நந்தகுமார் கல்வி மற்றும் விளையாட்டு இரண்டும் இரு கண்கள். அவைகள் தான் மாணவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது என்று விளக்கினார். பாராட்டு விழாவில் மாணவர்களுக்கு PSB டிபார்ட்மெண்ட் சார்பாக தலா ரூபாய் 1000/- மதிப்புள்ள புத்தகப் பை மற்றும் கற்றல் உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது,


நிகழ்வில் V4U சௌந்தர்ராஜன் வழக்கறிஞர் முனிராஜ், நவீன் குமார், மணியரசன், ஸ்ரீ நிதின், மகாத்மா காந்தி மலைநேர பயிற்சி மைய ஆசிரியர்கள் கவிதா வத்தல்மலை, கவிப்பிரியா சீராண்டபுரம் மற்றும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


முன்னதாக V4U நிறுவனத் தலைவர், NDSO மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை V4U - NDSO நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர், முடிவாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழக்கறிஞர் முனிராஜ் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad