வருகின்ற 02.08.2024 முதல்‌ 04.08.2024 வரை மூன்று நாட்கள்‌ மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படவுள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 ஜூலை, 2024

வருகின்ற 02.08.2024 முதல்‌ 04.08.2024 வரை மூன்று நாட்கள்‌ மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படவுள்ளது.


தருமபுரி மாவட்டம்‌, பென்னாகரம்‌ வட்டம்‌, ஒகேனக்கல்லில்‌ ஆடிப்பெருக்கு விழா வருகின்ற 02.08.2024 முதல்‌ 04.08.2024 வரை மூன்று நாட்கள்‌ சிறப்பாக நடைபெற உள்ளது. ஒகேனக்கல்‌ ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ஆப, அவர்கள்‌ தலைமையில்‌ அனைத்து துறை அலுவலர்களூடணான ஆலோசனைக்கூட்டம்‌ இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம்‌, பென்னாகரம் வட்டம்‌, ஒகேனக்கல்‌ ஆடுப்பெருக்கு விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி அவர்கள்‌ தலைமையில்‌ அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்‌ இன்று (19.07.2024) நடைபெற்றது.


தருமபுரி மாவட்டத்திற்கு சிறப்பு பெற்ற ஒகேனக்கல்‌ ஆடுப்பெருக்கு. விழாவினை நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி, தருமபுரி மாவட்டத்தில்‌ சிறப்பு பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கலில்‌ இந்த ஆண்டு ஒகேனக்கல்‌ஆடிப்பெருக்கு விழா வருகின்ற 02.08.2024 முதல்‌ 04.08.2024 வரை 3 நாட்களுக்கு சிறப்பாக நடைபெற உள்ளது. 


இவ்விழாவில்‌ மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற உறுப்பினர்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌, அரசு உயர்‌ அலுவலர்கள்‌ பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்‌.  இவ்விழாவில்‌ சுற்றுலா பயணிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ அறியும்‌ வகையில்‌ பல்வேறு துறைகளின்‌ சார்பில்‌ அரசின்‌ திட்டங்கள்‌ மற்றும்‌ சாதனை விளக்க கண்காட்சி   அரங்குகள்‌   அமைத்திட   அறிவுறுத்தப்பட்டுள்ளது.   


மேலும்‌, இவ்விழாவினை முன்னிட்டு இவ்விழா நடைபெறும்‌ 3 நாட்களுக்கும்‌. கலைபண்பாட்டுத்துறை, பள்ளிக்கல்வித்‌ துறை, உயர்கல்வித்துறை மற்றும்‌ சுற்றுலா துறை மூலம்‌   பல்வேறு கலை   நிகழ்ச்சிகள்‌   நாள்தோறும்‌ நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விழாவின்‌ போது வருகைதரும்‌ சுற்றுலாப்‌ பயணிகளுக்கு மருத்துவ முகாம்கள்‌ ஏற்பாடு செய்தல்‌, பாதுகாக்கப்பட்ட குடிநீர்‌ மற்றும்‌ சுகாதார ஏற்பாடுகள்‌ செய்தல்‌, தடையில்லா மின்சாரம்‌ வழங்குதல்‌, பாதுகாப்பு ஏற்பாடுகள், மேற்கொள்ளுதல்‌, குடிநீர்‌ மற்றும்‌ தற்காலிக கழிப்பிட வசதிகள்‌ ஏற்பாடு செய்தல்‌, கூடுதல்‌ போக்குவரத்து வசதிகள்‌ (சிறப்பு பேருந்து இயக்குதல்‌) ஏற்பாடு செய்தல்‌, தீயணைப்பு ஊர்திகள்‌ ஏற்பாடு செய்தல்‌, பங்குபெறும்‌ முக்கிய பிரமுகர்கள்‌, கலைஞர்களுக்கு விருந்தோம்பல்‌ வழங்குதல்‌, பத்திரிக்கையாளர்கள்‌, ஊடக துறையினரை பங்கேற்க செய்தல்‌, விழா மேடை, பந்தல்‌, கண்காட்சி அரங்குகள்‌ அமைத்தல்‌ மற்றும்‌ பல்வேறு அரசுத்துறைகளின்‌ சார்பில்‌ அரசு நலத்திட்ட உதவிகள்‌ வழங்க தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுதல்‌ உள்ளிட்டவைகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இஆப., அவர்களால்‌ அனைத்து துறை அலுவலர்களுடன்‌ ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளது.


இக்கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (பொது) திரு.சையது முகைதீன்‌ இப்ராகிம்‌, செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ திரு.சு.8மாகன்‌, மாவட்ட சுற்றுலா அலுவலர்‌ திரு.உமாசங்கர்‌ மற்றும்‌ அனைத்து துறை அரசு அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

கருத்துகள் இல்லை:

Post Top Ad