09.07.2024 முதல் 12.07.2024 மற்றும் 15.07.2024 வரை ஒரு வார காலம் “தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக” அனுசரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 ஜூலை, 2024

09.07.2024 முதல் 12.07.2024 மற்றும் 15.07.2024 வரை ஒரு வார காலம் “தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக” அனுசரிப்பு.


தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் இன்றைய இளைஞர்களது வேலைபெறும் திறனை அதிகரிக்கும் விதமாக, பல்வேறு திறன் பயிற்சிகளின் தேவை மற்றும் அவற்றின் முக்கியத்துவம் கருதி இளைஞர்களிடையே திறன் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு படிப்பு, பணிவாய்ப்புகள் மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்தும், தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் 09.07.2024 முதல் 12.07.2024 மற்றும் 15.07.2024 வரை ஒரு வார காலம் “தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக” அனுசரிக்கப்படுகிறது.

முதல் நாளான ஜுலை 09-ம் தேதியன்று மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், இரண்டாம் நாளான ஜுலை 10-ம் தேதியன்று மகளிருக்கான தொழில் நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புனர்வு நிகழ்ச்சியும், மூன்றாம் நாளான ஜுலை 11-ம் தேதியன்று பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியும், நான்காம் நாளான ஜுலை 12-ம் தேதியன்று பள்ளி/கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியும், ஐந்தாம் நாளான ஜுலை 15-ம் தேதியன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவ, மாணவியருக்கான தொழில் நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புனர்வு நிகழ்ச்சியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும், www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் திறன் பயிற்சி பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு அவ்விணைய தளத்திலேயே திறன் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்து பயனடையலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad