ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் வினாடிக்கு1லட்சம் கன அடியாக அதிகரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 31 ஜூலை, 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் வினாடிக்கு1லட்சம் கன அடியாக அதிகரிப்பு.


கடந்த சில நாட்களாக கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் குறைத்து வெளியேற்றப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்தது. இதனால் தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வினாடிக்கு 25,000 கன அடியாக நீடித்து வந்தன. 


மேலும் கர்நாடகா அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதால் படிப்படியாக நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு நேற்று 55 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.


மேலும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கிய நீர்வரத்து தற்போது வினாடிக்கு 1லட்சம் கன அடியாக நீடித்து வருகின்றன. ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.  


இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குளிப்பதற்கு தொடர்ந்து 15வது நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad