தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் பாப்பாரப்பட்டியை சேர்ந்த இலட்சுமணன் (வயது .57) கடந்த 1ம் தேதி பாலக்கோடு அடுத்த சூடப்பட்டியை சேர்ந்த நாகராஜ் (வயது.34) என்பவர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் தனது அண்ணன் மகன் இப்பள்ளியில் படித்து வருவதாகவும், அவரது ஆதார் கார்டில் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்ய வேண்டும் என கூறி கடிதம் கேட்டுள்ளார்.
அதற்கு உரிய ஆதாரம் இருந்தால் மட்டுமே கடிதம் தர முடியும் என கூறியதற்க்கு நான் யார் தெரியுமா. 10 ரூபா இயக்கத்தின் மாவட்ட செயலாளர் என்னிடமே ஆதாரம் கேட்கிறாயா என ஒருமையில் பேசி காலால் வயிற்றின் மீது எட்டி உதைத்து, பலமாக தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இவரது சத்தம் கேட்டு அங்கிருந்த ஆசிரியர்கள் ஓடி வந்து தலைமை ஆசிரியரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து தலைமையாசிரியர் லட்சுமணன் பாலக்கோடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக