பாலக்கோடு அருகே 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து பள்ளி மாணவர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் காயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 ஜூலை, 2024

பாலக்கோடு அருகே 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து பள்ளி மாணவர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் காயம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் இருந்து நேற்று மாலை ஒரு  தனியார் பஸ், 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாரண்ட அள்ளி  சென்று கொண்டு இருந்தது. இதே போல் வெள்ளிச்சந்தையில் இருந்து, பாலக்கோடுக்கு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த தனியார் பேருந்துகளில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள்  பயணம் செய்தனர்.


 பாலக்கோடு சர்க்கரை ஆலை அருகே  சாலையின் குறுக்கே ஒரு ஆட்டோ திடீரென வந்ததாக கூறப்படுகிறது. அதன் மீது மோதாமல் இருக்க மாரண்டஅள்ளி நோக்கி சென்ற பஸ் டிரைவர் தங்கராஜ்(46) என்பவர் பஸ்சை பக்கவாட்டில் திருப்பி  உள்ளார். அப்போது, எதிரே வந்த தனியார் பஸ்  மீது இந்த பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் இந்த 2 பஸ்களின் முன்பகுதி சேதமடைந்தது. 2 பஸ்களிலும் பயணம் செய்த  டிரைவர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட  103 பேர் காயமடைந்தனர். இவர்களில் 40 - க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.  இதை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 


இது பற்றி தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 மற்றும் தனியார்  ஆம்புலன்ஸ்கள் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ, பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி  உள்ளிட்டோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை நேரில் பார்வையிட்டனர்.


இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தனியார் பஸ் டிரைவர் ஜமீர்(வயது 30), பயணிகள் தண்டுகாரணஹள்ளியை சேர்ந்த பள்ளி மாணவன்  அன்பரசு(15), லோகேஸ்வரி(17), மாதம்பட்டியை சேர்ந்த தீபிகா(14), சுஜிதா(16), கோடியூரை சேர்ந்த மேகலா(17) ஆகிய பள்ளி மாணவிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


விபத்தில்  காயமடைந்தவர்களுக்கு உரிய மேல்  சிகிச்சை அளிக்க, மருத்துவர் இணை இயக்குனர் சாந்தி அவர்கள் மருத்துவர்களுக்கு  அறிவுறுத்தினார்  இந்த விபத்து தொடர்பாக பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் காவல் ஆய்வாளர் பாலசுந்தர் சம்பவ இடத்திற்க்கு சென்று   விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலக்கோடு  அருகே, இரு தனியார் பஸ்கள் நேருக்கு, நேர் மோதிக் கொண்டன. இதில் பஸ்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அவசர சிகிச்சைக்காக பாலக்கோடு அனுப்பு வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad