இராமகொண்டஅள்ளி அரசு பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த சொந்த நிதி ரூ 2 லட்சம் அரசுக்கு செலுத்திய PTAதலைவர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 ஜூலை, 2024

இராமகொண்டஅள்ளி அரசு பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த சொந்த நிதி ரூ 2 லட்சம் அரசுக்கு செலுத்திய PTAதலைவர்.


தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் இராமகொண்ட அள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். காடு மற்றும் மலை சூழ்ந்த பகுதி என்பதால் பள்ளியை  மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ஊர் மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசுக்கு ரூ 2 லட்சம் செலுத்த வேண்டும்.இதற்கான தொகையை பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கிருஷ்ணன் தனது சொந்த நிலத்தில் இருந்து அரசுக்கு நேற்று செலுத்தினார்.


பின்னார்  இதற்கான சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர் ரவிசந்திரனிடம் ஒப்படைத்தார். PTA தலைவரின்இந்த செயலை அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெரிதும் பாராட்டினர். இந்த நிகழ்ச்சியின் போது PTAதுணைத் தலைவர் இளையராஜா பொருளாளர் குமார் ஆகியோர் உடனே இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad