தீர்த்தமலை பகுதியில் தனியார் போலீஸ் பயிற்சி மையம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை 20ம் தேதி துவக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 ஜூலை, 2024

தீர்த்தமலை பகுதியில் தனியார் போலீஸ் பயிற்சி மையம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை 20ம் தேதி துவக்கம்.

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை அருகே உள்ள பாளையத்தில் ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் என்ற மையம் செயல்பட்டு வருகிறது இம்மையத்தில் பயின்று சுமார் 500க்கு மேற்பட்டோர் அரசு பணியில் உள்ளனர்  இம்மையத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் வசதி வாய்ப்புகள் இல்லாத ஏழை மக்ககள்  பயன் பெறும் வகையில் ஜீலை 20ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்க உள்ளனர் 


இதில்  ரத்ததானம்,  கண்தானம் முகாம்கள் நடைபெறுகிறது  சனிக்கிழமை காலை அரூர் அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர்கள் ரத்ததானம் வழங்குகிறார்கள் பின்னர்   தனியார் திருமண மண்டபத்தில் கண்தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்து கண்தானம்  பின்னர்  அரூர்  கிளை சிறைக்கு புத்தகங்களை வழங்குதல் சட்டையம்பட்டி மத்தியம்பட்டியில் உள்ள  உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு  நினைவு பரிசு வழங்குதல் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார்கள்.


இந்நிகழ்ச்சிக்கு  நண்டுபள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஜெயபிரகாஷ் அழகேசன் தலைமை வகிக்கிறார் முன்னாள் அரசு வழக்கறிஞர் இளங்கோ விசிக ஒன்றிய செயலாளர் எம்.எஸ் மூவேந்தன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள் ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் ஆசிரியர் எம்.தமிழரசன் அனைவரையும் வரவேற்கிறார்.


இதில் இந்நாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொழிலதிபர்கள் அரசு மருத்துவர்கள் கட்சிகளின் இந்நாள்  முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கிறார்கள், இறுதியாக கனிமொழி தென்னரசு நன்றியுரையாற்றுகிறார்.


இதில் ரத்தம் வழங்கும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் திராளக பங்குபெற வேண்டும் என ஸ்ரீஅம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் நிறுவனர் அ.சி.தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad