வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தணிக்கை மேற்கொள்வதற்கு விருப்பமுள்ள பட்டய கணக்காளர்களிடமிருந்து (Charted Accountants) விருப்புரிமை கோரிக்கைகள் (Expression of Interest வரவேற்கப்படுகின்றன. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 ஜூலை, 2024

வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தணிக்கை மேற்கொள்வதற்கு விருப்பமுள்ள பட்டய கணக்காளர்களிடமிருந்து (Charted Accountants) விருப்புரிமை கோரிக்கைகள் (Expression of Interest வரவேற்கப்படுகின்றன.


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள சமுதாய அமைப்புகளான, மகளிர் சுய உதவி குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தணிக்கை மேற்கொள்வதற்கு விருப்பமுள்ள பட்டய கணக்காளர்களிடமிருந்து (Charted Accountants) விருப்புரிமை கோரிக்கைகள் (Expression of Interest வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்ப முறை மற்றும் படிவங்கள் மாதிரி ஆகியவை தருமபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திட்ட இயக்குநர் அவர்களிடமிருந்து நேரிலோ அல்லது தங்களது சுய விலாசமிட்ட உறையுடன் கூடிய விண்ணப்ப கடிதம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அளிக்க கடைசி நாள் 10.07.2024 ஆகும்.


தங்களது விண்ணப்பங்களை திட்ட இயக்குநர் / இணை இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இரண்டாம் தளம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டடம், மாவட்ட ஆட்சியர் அலுலவகம், தருமபுரி 636 705 என்ற முகவரிக்கு 10.07.2024 பிற்பகல் 3.00 மணிக்குள் விண்ணப்பங்களை நேரிலோ/அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப தெரிவிக்கப்படுகிறது. தாமதமாகவோ நாள் கடந்தோ வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


மேலும், விவரங்களுக்கு அலைபேசி எண். 04342 233298 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad