தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வழியாக குட்கா கடத்துவதாக பாலக்கோடு போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு கல் கூட அள்ளி தேசிய நெடுஞ்சாலையில் பாலக்கோடு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த மினி பிக்கப் சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடைசெய்யப்ட 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ், பான்மசாலா, உள்ளிட்ட குட்கா பொருட்கள் மறைத்து கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டு குட்கா பொருட்களுடன் 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மினி சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்து விசாரித்ததில் பென்னாகரம் அடுத்த பழைய பாப்பாரப்பட்டியை சேர்ந்த ராமசந்திரன் (வயது .28) என்பதும் சட்டவிரோதமாக குட்கா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக