அரூர் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 ஜூலை, 2024

அரூர் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம்.


தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பே. தாதம்பட்டி கிராமத்தைச் சார்ந்த ராஜேஷ், (34) என்பவர் கடந்த 2013 -ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தார் தற்பொழுது சென்னையில் ஆயுதப் படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். ராஜேஷ்க்கு திருமணமாகி சத்யா, மற்றும் துகில்ஓவியா, ரிதன்யா, இதலிக்கா, என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில்  விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராஜேஷ், கடந்த 18- ஆம் தேதி அரூரில் உள்ள தனது மனைவி சத்யாவை அழைத்து வருவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது சேலம் பிரதான சாலையில் சின்னாங்குப்பம் அருகே திடீரென இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த ராஜேஷ், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 


இந்த நிலையில் கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு காவலர் ராஜேஷின், உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதனை அடுத்து ராஜேஷின் உடல் சொந்த ஊரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஊர் மயானத்தில் காவல்துறையின் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், மூன்று சிறு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் விபத்தில் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad