முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (25.07.2024) நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (25.07.2024) வியாழக்கிழமை மாலை 04.30 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீர்ர்கள் அவர்தம் சார்ந்தோர்கள் கோரிக்கை ஏதுமிருப்பின் தங்களது கோரிக்கை மனுவினை இரட்டைப் பிரதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக