தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 12 குழந்தை திருமண வழக்கு பதிவு - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 ஜூலை, 2024

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 12 குழந்தை திருமண வழக்கு பதிவு - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  குழந்தைகளின்  ஊட்டச்சத்து நிலைப்பாடு  குறித்து சமூக நலன்  மற்றும்  மகளிர்  உரிமைத்துறை,  மாற்றுத்திறனாளிகள்  நலத்துறை அலுவலர்கள் மற்றும்  களப்பணியாளர்களுக்கான  ஆய்வுக் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகளின்  ஊட்டச்சத்து நிலைப்பாடு குறித்து சமூக நலன்  மற்றும்  மகளிர்  உரிமைத்துறை,  மாற்றுத்திறனாளிகள்  நலத்துறை அலுவலர்கள் மற்றும்  களப்பணியாளர்களுக்கான  ஆய்வுக் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் 19.07.2024 அன்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில்  குழந்தைகளின்  ஊட்டச்சத்து நிலை  (மெலிதல்  தன்மை, குள்ளத்தன்மை, எடை குறைவு), இளவயது  திருமணம், இளவயது  கர்ப்பம், மாற்றுத்திறனாளி  குழந்தைகளின்  நலன், பள்ளி  இடைநிற்றல்  குழந்தைகளின்  சேர்க்கை  விவரம் மற்றும்  சமூக  நலத்துறை  திட்டங்கள்  மற்றும்  பெண் குழந்தை பாதுகாப்பு சட்டங்கள்  குறித்து  களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். 


மேலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையில்  மெலிதல் தன்மை மற்றும் எடை குறைவு ஆகிய  குறியீடுகளில் மாநில  அளவில்  தருமபுரி மாவட்டம் முன்னேற்றம் காணப்படுவதாகவும், குள்ளத்தன்மையில்  அதிக  கவனம் செலுத்துமாறு சமந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டது. மேலும், கடந்த  3 மாதங்களில் குழந்தை  திருமணம் தொடர்பாக  12 வழக்குகள்  பதிவு  செய்யப்பட்டு  விசாரணை  மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. இது தொடர்பாக குழந்தை  திருமணத்திற்கு ஆதரவாக  செயல்படுவோர்  மீது சட்டபடி  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி, இஆப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


இக்கூட்டத்தில்  மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் / மாவட்ட  சமூக நல அலுவலர் (பொ)  திருமதி.ச.பவித்ரா,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள்  நல அலுவலர்  திருமதி.செண்பகவள்ளி, மாவட்ட  குழந்தை  பாதுகாப்பு  அலுவலர் திரு.நடராஜன்,  மாவட்ட  பயிற்சி  மருத்துவ  அலுவலர் மரு.ச.கனிமொழி மற்றும்  அனைத்து வட்டார குழந்தை  வளர்ச்சி திட்ட  அலுவலர்கள், களப்பணியாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad