அரூரில் மதிமுகவின் 31 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 ஜூலை, 2024

அரூரில் மதிமுகவின் 31 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது..


தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த மதிமுக சார்பில் மதிமுகவின் 31ஆம் ஆண்டு துவக்கவிழா நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி விழா, கட்சி கொடியேற்று விழா என முப்பெறும் விழா  பொதுக்கூட்டம் நடைபெற்றது  இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.ராமதாஸ் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் சி.கிருபானந்தன் அனைவரையும் வரவேற்றார்.


மதிமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் பி.எம்.ராஜாமணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள்  இரா.குணசேகரன் மொ.குமரவேல் மாவட்ட துணை செயலாளர்கள் சி.பட்டுராஜா கேபி.சரவணன்  கே.ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினராக  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின்  மாநில பொருளாளர் மு.செந்திலதிபன் கலந்து கொண்டு உரையாற்றினார்.


அப்போது அவர் பேசுகையில் சில இயக்கங்கள் தொடங்கிய சிறிது காலத்திலேயே காணமல் போயியுள்ளது மதிமுக தொடங்கி 31ம் ஆண்டில் கம்பீரமாக அடியெடுத்து வைக்கிறது, தலைவர் வைகோவின் போராட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்தது நாடாளுமன்ற உறுப்பினராக அவரின் செயல்பாடுகள் அனைத்தும் பாரத பிரதமர்களால்  தென்னகத்தின் சிறந்த தலைவர் என பெயர் பெற்றுள்ளார்.


மொராஜ்தேசாய் பிரதமராக இருந்தபோது இந்தியில் அனுப்பபட்ட கடிதத்தை அவர் முன் வீசி எறிந்தார் தற்போது ஒன்றிய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது, அதில் தமிழ்நாடு என்ற வாரத்தைகள் இல்லை அந்த பட்ஜெட் ஆந்திராவிற்கும் பீகாருக்கும் தயாரிக்கப்பட்டது, மேகதாது முல்லை பெரியார், ஸ்டெர்லைட், நெய்வேலி அனல்மின் ஆகிய போராட்டங்களில் வெற்றி பெற்றவர் தலைவர் வைகோ.


தென்னகத்தில் பாஜக கால் ஊன்ற அனுமதிக்கமாட்டோம் மோடி எத்தனை திருக்குறள் சொன்னாலும் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரண தொகை பட்ஜெட் எதுவும் அறிவிக்கவில்லை தமிழகம் அண்ணாமலைக்கு ஆரோகரா போட்டுள்ளது, ஒன்றிய அரசுக்கு தமிழகம் ஜிஎஸ்டி வரி அதிகளவில் கொடுத்துள்ளது, ஆனால் நிதி ஒதுக்கவில்லை குடியுரிமை சட்டம் கொண்டு வந்து இசுலாமியரை வேட்டையாடியது, ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு மட்டும் தான் என கூறினார்.


முன்னதாக தருமபுரி மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு செந்திலதிபன் அவர்களுக்கு ஆளூயர மாலை அணிவித்து வெள்ளிவாள் அளித்தனர்.


காலை முதல்  தருமபுரி மாவட்டம் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில்  கட்சியின் கொடியேற்றினார் இதில் மாவட்ட கழக துணை செயலாளர் சி.பட்டுராஜா ஒன்றிய செயலாளர்கள் அரூர் மேற்கு வடுகை வெ.வேலாயுதம் அரூர் கிழக்கு வேம்பை மா.முருகேசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர் இறுதியில் வர்த்தகரணி பொறுப்பாளர் வேம்பை கோ.மாரியப்பன் நன்றியுரை ஆற்றினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad