மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.7.2024) தருமபுரி, பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தருமபுரி மாவட்டத்தில் 444 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் 621 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 2,637 பயனாளிகளுக்கு 56 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தருமபுரி அரசு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலமாக சேலம் வந்தடைந்தார். பின்னர், சேலம் விமான நிலையத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.
பின்னர் சேலத்திலிருந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விழா நடைபெறும் தருமபுரிக்கு சாலை மார்க்கமாக சென்றார். சேலத்திலிருந்து தருமபுரி வரை வழிநெடுகிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று (11.7.2024) தருமபுரி அரசு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள் நெடுஞ்சாலைத் துறை சார்பில், 339 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் தருமபுரி முதல் அரூர் மொரப்பூர் சாலை மற்றும் திருவண்ணாமலை முதல் அரூர் தானிப்பாடி சாலை வரை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி, முடிவுற்ற சிறுபாலங்கள் மற்றும் பாலப் பணிகள்; பள்ளிக்கல்வித் துறை சார்பில், 4 கோடியே 64 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் பி. துறிஞ்சிப்பட்டி, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, பேளாரபள்ளி, பண்டஅள்ளி மற்றும் பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 22 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 17 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் செலவில் ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான சுகாதாரக் கட்டடம்; உயர்கல்வித் துறை சார்பில், 11 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் ஒரு உள்விளையாட்டு அரங்கம்; பால்வளத் துறை சார்பில், 2 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவில் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், தருமபுரி பால் குளிரூட்டும் நிலைய வளாகத்தில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய பால் பதப்படுத்தும் மற்றும் பால் பாக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலை; ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், 4 கோடியே 4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 8 பள்ளிகளுக்கு 18 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம்; தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 51 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் அரூர் வட்டம், பீச்சாங்க்கொட்டாய் பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 504 அடுக்குமாடி குடியிருப்புகள்; நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், 60 இலட்சம் ரூபாய் செலவில் அன்னசாகரம் கங்கரன் கொட்டாய் பகுதியில் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடம்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 7 கோடியே 74 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாய் செலவில் மகளிர் விடியல் பயணத் திட்டப் பயன்பாட்டிற்காக தற்சமயம் இயங்கிவரும் பேருந்துகளுக்கு பதிலாக 20 புதிய நகரப் பேருந்துகள்; மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், 12 கோடியே 77 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடங்கள், பல்நோக்கு மையக் கட்டடம், கூடுதல் பள்ளிக் கட்டடங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம், வட்டார சுகாதார நிலையம், நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையக் கட்டடங்கள், தானிய சேமிப்பு கிடங்குகள், பாலங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சுகாதார வளாகங்கள்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 42 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம், திப்பிரெட்டிஅள்ளியில் துணை சுகாதார நிலையக் கட்டடம்; பேரூராட்சிகள் துறை சார்பில், 8 கோடியே 1 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் தருமபுரி மாவட்ட பேரூராட்சி பகுதியில் சிறுவர் பூங்காக்கள், நவீன நிழற்கூடம், வாரச் சந்தை மேம்பாடு, சிசிடிவி கேமராக்கள், சகடு கழிவுநீர் அகற்றும் மேலாண்மை பணிகள், பேருந்து நிலையம் பராமரிப்பு பணிகள்; வனத்துறை சார்பில், 2 கோடியே 25 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் வனச்சரக அலுவலகக் கட்டடம், குடியிருப்புக் கட்டடங்கள், தீ கட்டுப்பாடு கட்டடம், பெண் வனப்பணியாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய ஓய்விடக் கட்டடம் மற்றும் வேட்டைத்தடுப்பு முகாம் கட்டடம்; என மொத்தம் 444 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் 621 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய நலத்திட்ட உதவிகளின் விவரங்கள் கூட்டுறவுத் துறை சார்பில் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், சுய உதவிக்குழு கடன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனம், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் ஒருங்கிணைத்த பண்ணையம், வேளாண் பொறியியல் துறை சார்பில், திறனற்ற பழைய மோட்டாருக்கு பதிலாக புதிய மோட்டார், சிறுதானிய இயக்க திட்டத்தின் கீழ் உழவு மானியம், தோட்டக்கலைத் துறை சார்பில் நுண்நீர் பாசனத்திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், நீர்சேகரிப்பு அமைப்பு, சிப்பம் கட்டும் அறை, பசுமை குடில், நிழல் வலைக்கூடம், மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு வங்கிக் கடன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நல உதவிகள்; மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மூலம் புதிய தொழில் தொடங்க கடனுதவி, தொழிலாளர் நலத்துறை சார்பில் பணியிடத்து விபத்து மரண உதவித் தொகை, விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை வழங்குதல், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரங்கள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் நிதி ஆதரவு கல்வி உதவித் தொகை, வருவாய்த் துறை சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், நல்லம்பள்ளி, அரூர், பாலக்கோடு மற்றும் தருமபுரி வட்டங்களில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம், கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்குதல், ஊரக குடியிருப்புகள் பழுது நீக்க திட்டத்தின் கீழ் பழுது நீக்கி வீடு வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குதல்; என மொத்தம் 2637 பயனாளிகளுக்கு 56 கோடியே 4 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள் தருமபுரி மாவட்ட மக்களின் நலன் கருதியும், மாவட்டத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் நோக்கிலும், கடந்த 30.9.2021, 20.1.2022 மற்றும் 11.3.2024 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அரசு விழாக்களில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 235 கோடியே 53 இலட்சம் ரூபாய் செலவிலான 937 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 72 கோடியே 87 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 642 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 213 கோடியே 18 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 17,443 பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும், 30.9.2021 அன்று வத்தல் மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2116 மலைவாழ் மக்கள் மற்றும் பிற பயனாளிகள் பயன்பெறும் வகையில் 16 கோடியே 47 இலட்சம் ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 2024-25ஆம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்திற்கு நிதிநிலை அறிக்கை மற்றும் துறைகளின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களின் விவரங்கள் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ், 7,890 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டப் பணிகளை செயல்படுத்துதல், தருமபுரி மாவட்டம், சோகத்தூர் அரசு பட்டுப் பண்ணை வளாகத்தில் மின்னணு ஏலமுறை உட்பட நவீன அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம், தருமபுரி நகராட்சியில் புதிய பயோகேஸ் மையம், பாலக்கோடு பேரூராட்சியில் புதிய சந்தை, பென்னாகரத்தில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக்கல்லூரி மாணவர் விடுதி, பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனையில் உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுடன் கூடிய விபத்து பிரிவு, தருமபுரி மாவட்ட மக்களின் நலனிற்காக நடமாடும் கண் மருத்துவப் பிரிவு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பன்னோக்கு மருத்துவ மையம், மாரண்டஹள்ளி சுகாதார செவிலியருக்கான பயிற்சிப் பள்ளிக்கு கூடுதல் விடுதிக் கட்டடம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் போன்ற பல்வேறு திட்டங்களை தருமபுரி மாவட்ட மக்களின் நலனிற்காக செயல்படுத்திட இந்த நிதியாண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
இந்த விழாவில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஆ. மணி, திரு. டி.எம். செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜி.கே. மணி, திரு.எஸ்.பி. வெங்கடேஸ்வரன், திரு. ஆர். ராஜேந்திரன், முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலர் திரு. த. மோகன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி. சாந்தி, இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி யசோதா மதிவாணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக