பாலக்கோட்டில் கௌரவ விரிவுரையாளர்கள் 5-வது நாளாக ஊதியம் உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி கவனஈர்ப்பு போராட்டம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 ஜூலை, 2024

பாலக்கோட்டில் கௌரவ விரிவுரையாளர்கள் 5-வது நாளாக ஊதியம் உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி கவனஈர்ப்பு போராட்டம்


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 73 பேர்  கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இன்று  5-வது நாளாக ஊதியம் உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி கவனஈர்ப்பு போராட்டம் கல்லூரி நுழைவு வாயில் முன்பு விரிவுரையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் பல ஆண்டுகளாக கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரியும் எங்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை அரசாணை 56-இன் படி எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மாதம் ரூ 50,000 ஊதியம் வழங்க வேண்டும். நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசு கற்பித்தல் பணி அனுபவத்துக்கு ஆண்டுக்கு தலா 2 மதிப்பெண் வழங்கி 15 ஆண்டுகளாக பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு எழுத்துத் தேர்வை ரத்து செய்து நிரந்தரம் செய்ய வேண்டும்.


மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடாக 4 சதவீதம் வழங்க வேண்டும் மகப்பேறு மருத்துவ விடுப்பு இறந்தவர்களுக்கு இழப்பீடு ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுதியும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்தில் 70க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad