தமிழ்நாடு பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கம் 70 ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கொடியேற்று விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஜூலை, 2024

தமிழ்நாடு பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கம் 70 ம் ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கொடியேற்று விழா.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கம் 70 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு  கொடியேற்று விழா பாலக்கோடு கிளை தலைவர் மாதையன் தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு மண்டல பொதுசெயலாளர் ஞானசேகரன், மண்டல தலைவர் சேட்டு, மண்டல பொருளாளர் பழனிசாமி,பாஜக மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சிவா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் தர்மபுரி கோட்ட பொறுப்பாளர் சின்னதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு பாரதீய போக்குவரத்து தொழிற்சங்கம் பாலக்கோடு கிளை கழக கொடி ஏற்றி இனிப்புக்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.


இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர் குப்புசாமி, பொருளாளர் சக்திவேல், மற்றும் பாஜக மாவட்ட மீனவர் அணி  தலைவர் பி.ஆர் . மாதையன்  உள்ளிட்டநிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad