தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேணுகா ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
இம்முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாமாரியப்பன், வளர்மதி சின்னவன், ராஜீ முத்துவேல், ஒன்றிய கவுன்சிலர் அழகு சிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் .அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு. முதலமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீடு திட்டம், சமுக நலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம், வேளாண்மைத் துறை மூலம் மானிய விலையில் விவசாய இடுபொருட்கள், இ.சேவை மூலம் எளிய முறையில் விண்ணப்பிக்கும் வசதிகள் உள்ளிட்ட தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இம்முகாமில் மாற்று திறனாளிகள் உபகரணங்கள் வேண்டியும், இலவச தையல் எந்திரம், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை உள்ளிட்டவை வேண்டி 700 பேர் மனு அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக