ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 ஜூலை, 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.


கர்நாடகா கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளில் வேகமாக நிரம்பி வருகின்றன இதனால் கபினி  கிருஷ்ணராஜ் சார் ஆகிய இரு அணைகளில் இருந்து நேற்று   86800 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை வரை 56 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து  இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 62  ஆயிரம் கன அடியாகவும் தற்போதைய நிலவரப்படி மேலும் அதிகரித்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.


இந்த நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஐந்தருவி சீனி அருவி மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிக்கு செல்கிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 11வது நாளாக தடை நீடித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad