சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 99-வது நினைவு தினத்தையொட்டி, நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி மலர் தூவி மரியாதை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஜூலை, 2024

சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 99-வது நினைவு தினத்தையொட்டி, நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி மலர் தூவி மரியாதை.


சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 99-வது நினைவு தினத்தையொட்டி, பாப்பாரப்பட்டியில் உள்ள நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி மலர் தூவி மரியாதை.

சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 99-ஆவது நினைவு தினம் இன்று ஜீலை 23 அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கில அரசுக்கு எதிராக போராடியதால் சிறையில் அடைக்கப்பட்டார்.  04.10.1884-ஆம் ஆண்டு வத்தலகுண்டுவில் பிறந்த தியாகி சுப்பிரமணிய சிவா அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்குப்பெற்று 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்ததோடு ஆங்கிலேயருக்கு எதிரான பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டவர். ஆன்மீகத்தோடு நாட்டின் விடுதலையையும் ஒன்றிணைத்து போராடியவர் தியாகி சுப்ரமணிய சிவா. தொடர்ந்து தொழுநோய் ஏற்பட்டு சிறையிலிருந்து விடுதலையான, தியாகி சுப்ரமணிய சிவா, இறுதிக்காலத்தில் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள பாரதபுரம் பகுதியில் 1925ம் ஆண்டு மறைந்தர். தொடர்ந்து பாப்பாரப்பட்டியில் அவரின் நினைவாக தமிழக அரசு நினைவு மணிமண்டபம் அமைத்தது. 


இன்று அவரது நினைவிடத்தில் அரசு  சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் உள்ள சிவாவின் விடுதலை போராட்டம், வாழ்கை வரலாறு குறித்து புகைப்படங்களை மாவட்ட ஆட்சித்தலைவைர் பார்வையிட்டார். 


இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தியாகி தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad