தொப்பூர் சுங்கசாவடியை உடைத்து கொண்டு தப்பி சென்ற குட்கா கடத்தல் கார், சி.சி.டி.வி காட்சி வெளியீடு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 ஜூலை, 2024

தொப்பூர் சுங்கசாவடியை உடைத்து கொண்டு தப்பி சென்ற குட்கா கடத்தல் கார், சி.சி.டி.வி காட்சி வெளியீடு.


தர்மபுரி மாவட்டம் தொப்பூர் வழியாக சொகுசு காரில்  குட்கா கடத்துவதாக ஜூன் 29ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, அதியமான்கோட்டை  போலீசார் தொப்பூர்சுங்க சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை  போலீசார் தடுத்து  நிறுத்த முற்பட்டனர். ஆனால் கார்  நிற்காமல் சென்றது மேலும் சுங்க சாவடியை உடைத்து கொண்டு வேகமாக தப்பி சென்றது. உடனடியாக மாவட்ட முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு சொகுசு காரை பிடிக்க தீவிர  சோதனை மேற்கொள்ளப்பட்டது.


பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் உத்தரவுப்படி, பஞ்சப்பள்ளி காவல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதையன், சிறப்பு நிலை உதவி ஆய்வாளர்கள் ஆறுமுகம் மாதேஸ்வரன், காவலர் அருண்பாண்டியன் மற்றும்  உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் காடுசெட்டிப்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை பிடிக்க முற்பட்டனர். கார் நிற்காமல் சென்றது, போலீசாரும்  சொகுசு காரை துரத்தி சென்றனர். கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது, டிரைவர் தப்பி ஓடி தலைமறைவானார். காரை  சோதனையிட்டபோது வானத்திற்குள் 35  மூட்டைகளில் சுமார் 3 இலட்சம் ரூபாய் மதிப்பிலான  500 கிலோ அளவிற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது, குட்காவுடன் 10 இலட்சம் ரூபாய்  மதிப்பிலான ஸ்கார்பியோ சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.


இது சம்மந்தமாக தொப்பூர் சுங்க சாவடியில் பதிவான சி.சி. டி.வி.காட்சி இன்று காலை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad