தருமபுரியில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 ஜூலை, 2024

தருமபுரியில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.


தர்மபுரி ரயில் நிலையம் முன்பு புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரும்ப பெற வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் மறியல் போராட்டம்.


மத்திய அரசு நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பிலும் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக, புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் சங்கத்தினர், தர்மபுரி ரயில் நிலையம் முன்பு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்கள் தேவையற்றது.இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டத் திருத்தத்தில், சமஸ்கிருதம் கொண்டுl வரப்பட்டுள்ளது. இதனால் மொழிப்பிரச்சிணை ஏற்படும். இதில் வழக்காடிகளுக்கும், பொதுமக்களுக்கு மிகுந்த சகரமம் ஏற்படும். எனவே இதனை உடனடகயாக திரும்ப பெற வேண்டும் என வலியுறத்தினர். 


மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெரம் வரை நீதிமன்றத்திற்கு செல்லப் போவதில்லை எனவும் தெரிவித்தனர். இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்..

கருத்துகள் இல்லை:

Post Top Ad