தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில் 17 வயதிற்க்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான 2 நாள் ஜூனியர் ஹாக்கி போட்டியினை ஹாக்கி யூனிட் இயக்குநரும், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ரங்கநாதன் தலைமையில் துவங்கியது.
இப்போட்டியினை தலைமை ஆசிரியர் லட்சுமணன்,மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுநாதன், ஆகிேயார் துவக்கி வைத்தனர். இப்போட்டியில் பாலக்கோடு, பேகாரஅள்ளி, நரிப்பள்ளி, B. அக்ராகரம், வெங்கட்டம்பட்டி, அரூர் உள்ளிட்ட அரசு பள்ளியை சேர்ந்த 7 அணிகள் பங்கேற்று விளையாடின, கருணாமூர்த்தி, குமரன், பிரபாகரன், குமரன், தெய்வானை, சென்பகவள்ளி ஆகியோர் இப்போட்டியின் நடுவராக இருந்தனர்.
இப்போட்டிக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் முனியப்பன், குமார், பார்த்தீபன், ரவீ, மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2 நாள் நடைப்பெற்ற இறுதி போட்டியில் பாலக்கோடு அணி 5 க்கு O என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் இடத்தையும் பேகாரஅள்ளி அணி 2ம் இடத்தையும் பிடித்தது.
போட்டியின் நிறைவு விழாவில் காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கண்ணன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் வஜ்ரவேல், மாரியப்பன். வெங்கட்டன் ஆகியோர் வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் கோப்பைகளும் மற்ற அணிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக