தொலைபேசி மற்றும் இணைய சேவை பெறுவதில் உள்ள சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்தாலோசனை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஜூலை, 2024

தொலைபேசி மற்றும் இணைய சேவை பெறுவதில் உள்ள சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்தாலோசனை.


மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தருமபுரி மாவட்டத்தில் தொலைபேசி மற்றும் இணைய சேவை பெறுவதில் உள்ள சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் தொலைபேசி மற்றும் இணைய சேவை பெறுவதில் உள்ள சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02.07.2024) நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, பாலக்கோடு ஆகிய வட்டங்களில் தொன்னகுட்லஅள்ளி, பத்தரஅள்ளி, வட்டுவனஅள்ளி, கம்மம்பட்டி, மானியதஅள்ளி, சித்தேரி, எஸ்.அம்மாபாளையம், பிக்கனஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி. அண்ணாமலைஅள்ளி, சிட்லிங், கோட்டப்பட்டி, எஸ்.தாதம்பட்டி உள்ளிட்ட 30 கிராமங்கள் மற்றும் வசிப்பிடங்களில் தொலைபேசி மற்றும் இணைய சேவை பெறுவதில் உள்ள சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் BSNL, AIRTEL, JIO ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


இதில் ஆரல்குந்தி, பரிகம், மலைத்தாங்கி, தோல்தூக்கி, முள்ளிக்காடு, அண்ணாமலைஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, சொரகுருக்கை, தாசம்பைல் மற்றும் சூரியக்கடை ஆகிய இடங்களில் தொலைதொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் செயல்பாடு மற்றும் பயன்பாட்டினை சீரமைத்து மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும், புதியதாக தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்க வேண்டிய இடங்களை களஆய்வு செய்து உடனடியாக கோபுரங்கள் அமைக்கவும், பொதுமக்களுக்கு தொலைதொடர்பு சேவையினை சீராக வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.


இக்கூட்டத்தில் அலுவலக மேலாளர் (நீதியியல்) திரு.அன்பு, BSNL இணை மேலாளர் திரு.சந்திரசேகர், AIRTEL, JIO சேவை நிறுவன இணை மேலாளர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad