பசுவாபுரம் ஊராட்சியில் சாலையோரம் மரங்கள் வெட்டி கடத்தல், நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 ஜூலை, 2024

பசுவாபுரம் ஊராட்சியில் சாலையோரம் மரங்கள் வெட்டி கடத்தல், நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.


கடத்தூர் அடுத்த பசுவாபுரம் ஊராட்சி உட்பட்ட பசுவபுரம் கிராம சாலையையொட்டி அமைந்துள்ள புறம்போக்கு நிலத்தில் உள்ள வேப்பம், கல்துரிஞ்சி  உள்ளிட்ட பலவகை மரங்களை, சிலர் சட்டவிரோதமாக வெட்டி கடத்துவதாக செய்தியாளர்களுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர், இதனை அடுத்து செய்தியாளர்கள் நேரில் சென்று, பார்த்தபோது மர்ம நபர்கள் அவசர அவசரமாக பிக்கப் வாகனத்தில் வெட்டப்பட்ட மரங்களை, ஏற்றி ஏற்றி சென்றனர்.

இதுகுறித்து, கடத்தூர் வருவாய் அலுவலர் மாதேஸ்வரன் அவர்களிடம். தொலைபேசியில் செய்தியாளர்கள் கேட்டபோது, பசுவாபுரம் அடுத்த ஓசூர் கிராம சாலை பகுதியில் உள்ள மரங்களை வெட்டியது எனக்கு தெரியவந்தது, உடனடியாக கிராம நிர்வாக அலுவலரை தொடர்புகொண்டு மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தும்படி உத்தரவிட்டேன், சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்லும் முன் அவர்கள் மரங்களை வெட்டி பிக்கப் வாகனத்தில் லோடு ஏற்றி எடுத்துச் சென்றுவிட்டனர்.


நாளை, செவ்வாய்க்கிழமை நில அளவீடு செய்ய அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நில அளவீடு செய்த பின்னர், நெடுஞ்சாலை மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் வெட்டப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டால், அந்த மரத்திற்கான அபராத தொகை கருவூலத்தில் ' கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை.

கருத்துகள் இல்லை:

Post Top Ad