பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி நடந்தது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 ஜூலை, 2024

பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி நடந்தது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு,பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி வகுப்பு கல்லூரி முதல்வர் முனைவர் தீர்த்தலிங்கம் தலைமையில்  நடந்தது. கௌரவ விரிவுரையாளர் அனிதா வரவேற்று பேசினார்.


இந் நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு  போலீஸ் துணை சூப்பிரண்டு சிந்து அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்  பள்ளி கல்வியை முடித்து கல்லூரியில் காலடி வைத்திருக்கும் மாணவ-மாணவிகள் இப்போதிலிருந்தே தனக்கென்று ஒரு இலட்சியத்தை கொண்டு செயல்பட வேண்டும், கல்வியில் சிறந்து விளங்குவதுடன், தான் கற்ற கல்வி இச்சமூக வளர்ச்சிக்கு பயன்படுவதாக அமைத்து கொள்ள வேண்டும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மதித்து போற்றும் பண்பாடுகளை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும், மேலும் அன்றாட பாடங்களை அன்றே படிக்க வேண்டும், பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டுக்களில் தொங்கி கொண்டு பயணம் செய்ய கூடாது, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை இயக்க கூடாது, மாணவர்கள் தலைமுடியை ஒழுங்காக வெட்டி வர வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.

நிகழ்ச்சி முடிவில் வணிகவியல் துறை தலைவர் சிவானந்தம் நன்றி உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், முதலாமாண்டு மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad